மேற்கத்திய அரசியல் தத்துவங்களுக்கு இணையாக, தமிழக மண்ணில் இருந்து தோன்றியுள்ள “வாக்காளரியல் தத்துவவியலும் வாக்காளரிலிச சித்தாந்தமும்” இன்று உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. யார் இதனை உருவாக்கியது? தத்துவவியலும் சித்தாந்தமும் என்ன? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
யார் இவர்?: பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த டாக்டர் வீ. ராமராஜ் நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டத்தையும் காவல் நிர்வாகத்தில் இளம் முனைவர் பட்டத்தையும் பெற்றவராவார். அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம், மனித உரிமைகள், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம், ஜர்னலிசம், அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகள், பொது நிர்வாகம் ஆகியவற்றில் முதுநிலை பட்டங்களையும் சரித்திரம் மற்றும் சட்டவியல் பட்டங்களையும் குற்றவியல் நீதி, குழந்தைகள் உரிமைகள் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டயங்களையும் பெற்றுள்ளார் (மொத்தம் 15). 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் (Source: தமிழ்நாடு லோக் ஆயுக்தா இணையதளம்).

அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய டாக்டர் வீ. ராமராஜ் தற்போது முதலமைச்சர் அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக உள்ளார். “மதிப்பிற்குரிய வாக்காளருக்கு” என்ற புத்தகத்தையும் பிரபல நாளிதழ்களில் பல கட்டுரைகளையும் ஆய்வு இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதி உள்ளார். இவரது சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இவருக்கு 2026 மார்ச் 18 அன்று சென்னையில் உள்ள சவீதா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது (Source; இந்து தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பு, 19-03-2026.).
வாக்காளரியல்: வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்த கல்வி மற்றும் ஆய்வே வாக்காளரியல் ஆகும் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் பதிப்பு, 05-11-2025). “எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்” (“Voters above all else”) என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் (தி இந்து ஆங்கில நாளிதழ், கோயம்புத்தூர் பதிப்பு, 26-02-2026). உண்மையான ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வாக்காளரியல் சிறந்த பாதையாகும் (தி டைம்ஸ் ஆப் இந்தியா, 24-02-2026)
வாக்காளரியலின் தந்தை: அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பல கல்வி பிரிவுகளின் தந்தைகளாக வெளிநாட்டவர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வாக்காளரியல் தத்துவத்தையும் (Voterology – Philosophy) வாக்காளரிலிச சித்தாந்தத்தையும் (Votrologism – Ideology) அறிமுகம் செய்த டாக்டர் வீ. ராமராஜ் வாக்காளரியலின் தந்தையாக விளங்குவது தமிழகத்திற்கு பெருமையாகும். 1996 ஆம் ஆண்டில் வாக்காளரியல், வாக்காளரிலிசம் என்ற வார்த்தைகளை வடிவமைத்து அவற்றை வரையறை செய்து அதற்கான கொள்கைகளை உருவாக்கியவர் வீ. ராமராஜ் (Source: தினகரன் நாளிதழ் திருச்சி பதிப்பு, D.Next, 08-02-2026).
கொள்கைகள்: வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஜனநாயகத்தின் எதிரிகள் ஆகும் என்பது வாக்காளரியலின் ஒரு கொள்கையாகும் (தினத்தந்தி, உடுமலைப்பேட்டை, 28-11-2025). சித்தாந்த ரீதியான செயல் திட்டங்களை முன்வைத்து ஆட்சியை வருபவர்களால்தான் சிறந்த அரசை அமைக்க முடியும் என்பது வாக்காளரியலின் மற்றொரு கொள்கையாகும் (தினமணி, மதுரை, 08-12-2025).
வாக்காளரியல் கல்வி குறித்து பள்ளிகளில் ஒரு பாடமாகவும் இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு தேர்வுத்தாள் ஆகவும் இருக்க வேண்டும் வாக்காளரியலிலில் முதுகலை பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் (தினமலர், கிருஷ்ணகிரி, 08-03-2026). எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது வாக்காளரியலின் ஒரு கொள்கையாகும் ( காலை கதிர், நாமக்கல், 24-02-2026).
தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல் தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு அமைப்பும் வாக்காளர்களின் உரிமைகளுக்கு ஒரு அமைப்பும் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த ஒரு அமைப்பும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் முடிவு குறித்த வழக்குகளை தீர்க்கும் வகையிலான ஒரு அமைப்பும் இருக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பத்து கொள்கைகளை டாக்டர் வீ. ராமராஜ் உருவாக்கியுள்ளார். வாக்காளரியல் ஏன் தனிக் கல்வித் துறையாக இருக்க வேண்டும் என்பதற்கு பத்து காரணங்களையும் இந்த படிப்பில் படிக்க வேண்டிய பத்து பாடங்களையும் அவர் விளக்கியுள்ளார் ( https://voterology.in/ ). வெளியீடு: https://tamilnewsbeat.com/





