Wednesday, February 11, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் சிலைகளை சுற்றிப்பார்த்து ரசித்த பள்ளி மாணவ மாணவியர்கள்

ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் சிலைகளை சுற்றிப்பார்த்து ரசித்த பள்ளி மாணவ மாணவியர்கள்

ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலிலின் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோவில் தூண்கள், சிற்பங்கள், சந்நிதிகளை பள்ளி மாணவ மாணவியர்கள் நேரில் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த பிப்.1-ல் நடந்தது. இக்கோவிலில் முழுமையும் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் உபயதாரர் ஆர்.பிரபாகரன் என்பவரால் முற்றிலும் புனரமைக்கப்பட்டது. இதில் புதிய கல் மண்படங்கள், தூண்கள், கல் சிற்பங்கள், சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் மொத்தம் 15 சந்நிதிகள் உருவாக்கப்பட்டு, 5 நிலை ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 145 யாக குண்டங்கள் அமைத்து பூஜைகள் நடத்தி வெகு விமர்ச்சியாக குடமுழுக்கு விழா நடத்தி முடிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் பெருமாளை வழிபட்டு, கோவில் சிற்பங்கள், தூண்களை பார்வையிட்டு தரிசனம் பெற்றுச்செல்கின்றனர். இந்நிலையில் ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 1, 2 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் நூற்றுக்கணக்கானோர் மூன்று வேன்களில் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டனர்.

பள்ளி ஆசிரியைகள் பத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான வகையில் அழைத்துச் மாணவ மாணவியர்களை அழைத்துச்சென்று கோவிலை சுற்றிப்பார்த்தனர். கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல் தூண், தசாவதார சிற்பங்கள், சுவாமி சிலைகள் புதிய சந்நிதிகள், 11 அடி உயர பெருமாள் போன்றவற்றை பார்வையிட்டு வழிபட்டனர். மாணவர்கள் தசாவதார சிலைகள் குறித்து விளக்கிக்கூறப்பட்டது. பின்னர் கோவில் மூலவரை வழிபட்ட பள்ளி குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் சந்தானம் தலைமையில் , அர்ச்சனைகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு சுவாமி திருநாமமந்திரங்கள் சொல்லப்பட்டன.

கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைபாடுகளை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரும் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!