Wednesday, July 15, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி -ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ராசிபுரம் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி -ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ராசிபுரம் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரி-ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா, கல்வி வளர்ச்சி தினவிழா, மரக்கன்றுகள் நடும் விழா போன்றவை கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் அசோக்குமார் வரவேற்றுப் பேசினார். ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஒ.வி.சதாசிவம் தலைமை வகித்தார். கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனத் தலைவர் க.சிதம்பரம் காமராஜர் வாழ்க்கை வரலாறு, பொது வாழ்வு, ஆட்சி முறை போன்றவை குறித்துப் பேசினார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் பரிசளித்தார்.

விழாவில் ரோட்டரி சங்கத்தின் மண்டல உதவி ஆளுநர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் வாழத்துரை வழங்கிப் பேசினர். பின்னர் அலங்கரிப்பட்ட காமராஜர் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு மழைநீர் சேமிப்பின் முக்கியத்தும் குறித்தும் விளக்கிக்கூறப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் இ.என்.சுரேந்திரன், எம்.முருகானந்தம், நிர்வாகிகள் ஆர்.அனந்தகுமார், ஏ.மஸ்தான், வெங்கடாஜலம், பி.கண்ணன், ஜி.தினகர், கல்லூரி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!