ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 124-வது பிறந்த தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனைடுத்து
ராசிபுரம், நாமக்கல் சாலை பகுதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காந்தி மாளிகை முன்பு நடைபெற்ற விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.வி. செந்தில், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராமுலு முரளி, ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றி காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் நோட்டுப் புத்தகங்கள், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மேலும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகம் அடங்கிய லஞ்ச ஊழலுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.வி.செந்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பாச்சல் ஏ.சீனிவாசன், கட்சியின் வர்த்தக அணி சண்முகம், புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகஸ்பதி, எஸ்.சர்மா , மதுரை வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெண்ணந்தூர் விசிக சார்பில்…

வெண்ணந்தூர் பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழாவில், கட்சியின் பேரூர் செயலர் க.நடராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டு எஸ்.பி.மாதேஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் அன்பரசன், தி.க. கட்சியின் செல்வகுமார், தவெக பேரூர் செயலர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் தொல்காப்பியர் நினைவு தினத்தை தொடர்ந்து அவரது படத்திற்கும் மலரஞ்சலி செலுத்தினர்.




