நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். கடையை திறக்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் சமரசம் செய்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் அரசு மதுபான கடை கடை உள்ளது. இந்த கடை குடியிருப்பு பகுதிகளிலேயே அமைந்துள்ளது. மேலும் அரசு மதுபான கடைக்கு மிக அருகாமையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளும், பல்பொருள் அங்காடிகளும் உள்ளன. மதுபான கடை அமைந்துள்ள சாலை, பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் என அனைவரும் கடந்து செல்லக்கூடிய மிக முக்கியமான பாதையாகும். இந்த மதுபான கடையில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையிலேயே அமர்ந்து மதுபானம் அருந்துவதால், பெண்களும் பள்ளி குழந்தைகளும் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் ஒரு சில மது பிரியர்கள் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும், அரைகுறை ஆடையுடன் நிற்பதும், பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்த கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை திறக்க வந்த ஊழியர்கள் அச்சம் அடைந்து உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி போராட்ட நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என கூறியதால், நாமக்கல் மாவட்ட மதுபான கிடங்கு மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், மாவட்ட மதுபான கிடங்கு மேலாளர் கனக மாணிக்கம் நேரில் வந்தார். இந்த கடையை அகற்ற ஒரு மாத காலம் அவகாசம் கொடுங்கள் என கேட்டுகொண்டதின் பேரில் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
குமாரபாளையம் பகுதியில் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
RELATED ARTICLES





