Tuesday, November 11, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு பேரமைப்பு சார்பில் பாராட்டு விழா அழைப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு பேரமைப்பு சார்பில் பாராட்டு விழா அழைப்பு

ஜி.எஸ்.டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரி குறைப்பு செய்துள்ளதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நவம்பர் 11ம் தேதி கோயமுத்தூர் பி.எஸ்.ஜி கன்வென்ஷன் அரங்கத்தில் மாலை 4:30 மணியளவில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 52 இணைப்பு சங்கங்களில் இருந்து சுமார் 1000 வணிகர்களுக்கு மேல் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவிற்கான அழைப்பிதழை நாமக்கல் மாவட்ட பேரமைப்பின் இணைப்பு சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர்.

இவ்விழாவில் வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர்கள் சார்பில் 5 பேருந்துகளில் 270 பேர் கலந்துகொள்கிறார்கள். இதற்கான பெயர் பட்டியலை சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையனிடம் வழங்கினார். அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வில் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராயல் பத்மநாபன், இளைஞர் அணி மாநகர துணை அமைப்பாளர் சிவக்குமார், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முரளி மற்றும் செல்போன் சங்க பிரதிநிதி ஹரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!