Wednesday, May 6, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மா.மதிவேந்தன்

ராசிபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மா.மதிவேந்தன்

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ராசிபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் மா.மதிவேந்தன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 2021ல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய ராசிபுரம் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின், கடந்த ஐந்து ஆண்டுகளில், ராசிபுரம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளோம். கூட்டுக்குடிநீர் திட்டம், மாவட்ட தலைமை மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, புறநகர் பேருந்து நிலையம், மினி விளையாட்டு அரங்கம், போதமலைச் சாலை போன்ற திட்டங்கள் என தொகுதி மக்களின் வாழ்வை வளமாக்கி ராசிபுரத்தின் வளர்ச்சிக்கும் வித்திடுபவை ஆகும். எதிர்வரும் காலங்களிலும், ராசிபுரம் தொகுதியை முதன்மைத் தொகுதியாக வளர்ப்பதிலும், மக்கள் தேவைகளை அறிந்து செயல்படும் வகையிலும், எனது பயணம் தொய்வில்லாமல் தொடரும்.

2026 தேர்தலில் வாக்காளர்கள் வழங்கிய தேர்தல் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், ராசிபுரம் தொகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,: இதே போல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம் , சேந்தமங்கலம் தொகுதியில் கட்சி வெற்றிக்காக பாடுப்பட்ட கட்சி நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,கிளை, வார்டு செயலாளர்கள், பிஎல்ஏ-2, பிஎல்சி முன்னோடிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் ஆகியோருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!