நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் குப்புசாமி, ஒன்றிய கொங்கு இளைஞர் அணி பொறுப்பாளர் அருள் ஆகியோர் தலைமையில் 30 பேர் பல்வேறு கட்சிகளிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கேஆர்என்.ராஜேஸ்குமார், எம்பி., முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.பி.ராமசுவாமி , கிளை கழக செயலாளர் மணி (எ) முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
RELATED ARTICLES