ராசிபுரம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வென்ற டி.லோகேஷ் தமிழ்செல்வன் ராசிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.முருகனிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்றார்.
ராசிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,22,252 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தேர்தலில் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சுயேட்சைகள் என 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 285 வாக்கு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 2,04,680 பேர் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ராசிபுரம் தொகுதியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மொத்தம் 21 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றிலிருந்தே தவெக வேட்பாளர் டி.லோகேஷ் தமிழ்செல்வன் முன்னிலை பெற்று வந்தார்.
இறுதியில் தவெக வேட்பாளர் டி.லோகோஷ் தமிழ்செல்வன் 14511 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமாரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டாக்டர் மா.மதிவேந்தன் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மொத்தம் பதிவான வாக்குகள் 2,04680,
டி.லோகேஷ் தமிழ்செல்வன் (தவெக) – 74808 ( 36.55 சதம்)
எஸ்.டி.பிரேம்குமார் (பாஜக) – 60297 (29.46 சதம்)
மா.மதிவேந்தன் (திமுக) -57854 (28.27 சதம்)
எஸ்.சசிகலா (நாதக) – 6415 (3.13 சதம்)
பிற சுயேட்சை வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்குகளே பெற்றுள்ளனர்.





