சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு முதலாமாண்டு விழா , புதிய உற்சவர் சிலை நிறுவும் விழா மே.3-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாரியம்மன், விநாயகர், பாட்டப்பன், சப்த கன்னிமார்கள் சிலைகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி ஹோம பூஜையுடன் யாக சாலை வேள்வி தொடங்கியது. புதிய மாரியம்மன் உற்சவர் சிலைக்கு உயிர் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று. பின்பு பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர். பின்னர் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர், விழாவினை நிர்வாக குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.





