திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அமைந்துள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில், உயிர் தியாகம் செய்த நாளான இன்று , ஜூன் 19ஆம் தேதி காலை விடுதலைக் களம் கட்சியின் சார்பில் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் மரியாதை செலுத்தினார்.
1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி, விவசாயிகள் மின் கட்டண உயர்வை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் இன்றைய திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் போராட்டம் நடத்தியபோது, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் உயிர் தியாகத்தின் விளைவால்தான் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
**இந்நிலையில் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் கட்சி நிர்வாகிகளோடு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில், விவசாய தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.*அப்போது விவசாயிகளின் உயிர் தியாகத்துக்கு வீர வணக்கம் செலுத்தி முழக்கங்களும் எழுப்பினர்.
இந்நிகழ்வில் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜனோடு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஊத்துக்குளி சின்னசாமி, மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், திருப்பூர் மாநகர பொறுப்பாளர்கள் ராமசாமி, முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்று வீர முழக்கமிட்டு விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
பெருமாநல்லூர் விவசாயிகள் நினைவிடத்தில் விடுதலைக் களம் கட்சியின் சார்பில் விவசாயிகளுக்கு மரியாதை
RELATED ARTICLES