ராசிபுரம் நகரில் உள்ள 27 வார்டுகளுக்கு திமுக இளைஞரணி அமைப்பாளர்களை நியமிக்கும் வகையில் விண்ணப்பங்கள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர்களிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
திமுக சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் இளைஞரணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதனையடுத்து ராசிபுரம் நகர திமுக இளைஞரணி சார்பில் வார்டுகள் தோறும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என 108 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் ஏ.கே.பாலசந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மா.கார்த்திக் ஆகியோர் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்றனர். இந்நிகழ்வில் நகர இளைஞரணி அமைப்பாளர் யோகராஜன் வார்டு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை ஒப்படைத்தார். நகர திமுக பொருளாளர் அன்சர், துணை அமைப்பாளர்கள் பாண்டியன், லவக்குமார், மணிகண்டன், தினேஷ்,தன்ராஜ், ராஜேஷ்,ரகுபதி, ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.