Thursday, June 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 4...

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 4 முடிவுற்ற திட்டப்பணிகளைதிறப்பு – அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்‌ பங்கேற்று ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் 21 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிங்களாந்தபுரம், கனகபொம்மன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, காக்காவேரி, பட்டணம் முனிப்பம்பாளையம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கூனவேலம்பட்டி, பொன்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் 11 சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் மற்றும் 4 ஓரடுக்கு கப்பி சாலைகள் அமைக்கும் பணி, அரசபாளையம், பொன்குறிச்சி ஊராட்சிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, வடுகம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.17.85 லட்சம் மதிப்பீட்டில் விவசாய தானிய விளைபொருள் சேமிப்புக்கூடம், காக்காவேரி ஊராட்சி, புதிய காலனி பகுதியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மோளப்பாளையம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், கனகபொம்மன்பட்டி ஊராட்சி, சின்னப்பநாயக்கன்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டங்கள் என மொத்தம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.95 லட்சம் மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி, பெரப்பன்சோலை ஆகிய பகுதிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!