ராசிபுரம் அருகே உள்ள போதமலை கீழையூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (27). கூலி தொழில் செய்து வரும் இவர் தற்போது பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் கைலாசம்பாளையம் பகுதியில் இருந்து பட்டணம் முனியப்பன்பாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த சேகர் என்பவருக்கு சொந்தமான பால்காரர் தோட்டம் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து சென்று 90 அடி ஆழ கிணற்றில் விழுந்த சதாசிவத்தை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம் அருகே பைக் உடன் கிணற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு
RELATED ARTICLES