Thursday, June 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்மாவட்ட ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனம் - ராசிபுரம் ரோட்டரி சங்கம் - இன்னர்வீல் சங்கம் இணைந்து...

மாவட்ட ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனம் – ராசிபுரம் ரோட்டரி சங்கம் – இன்னர்வீல் சங்கம் இணைந்து கல்விசார் திறன் அலைபேசி செயலிகள் உருவாக்கம் குறித்த பணிமனை

நாமக்கல், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் போன்றவை இணைந்து கல்விசார் திறன் அலைபேசி செயலிகள் உருவாக்கப் பணிமனையை நடத்தியது. இதில் 30 ஆசிரியர்களுக்கு மே.15 முதல் மே.17 வரை தன்னார்வ 3 நாள் பயிற்சியாக நடத்தின.

இப்பணிமனை தொடக்க நிகழ்ச்சியில் இந்நிறுவன முதுநிலை விரிவுரையாளர் இரா.முத்துகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு. செல்வம் பாடம் சார்ந்தக் கருத்தாக்கங்களை தெரிவித்து பேசுகையில், ஆசிரியர்கள் பணிச்சுமையின்றி எளிதாகக் கற்பிக்கவும், மாணவர்கள் செயல்பாட்டுடன் கூடிய கற்றலை மேம்படுத்த உதவும் கல்விச் செயலிகளை உருவாக்கப்பட வேண்டும் என்றும் , இந்த தொழினுட்பத்தை உருவாக்கத் தேவையானப் பொறியியல் திறன்களுக்கானப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன, என்றும் பொறியியல் சார்ந்தத் திறன்களை ஆசிரியர்களிடையே வளர்ப்பதற்கு ஆசிரியர் தொழினுட்ப மேம்பாட்டுப் பயிற்சிகள் உதவுகின்றன என்றும் கூறினார்.

ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தன் பயிற்சியைத் துவக்கி வைத்து, ஆசிரியர்களின் வளமே வகுப்பறைச் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது எனக் கூறினார். ராசிபுரம் இன்னர்வீல் சங்கத் தலைவி சுதாமனோகரன் பேசும்போது இது செயலிகளின் யுகம் என்பதால் வகுப்பறை செயல்பாடுகளுக்கு அலைபேசி செயலிகளைப் பயன்படுத்தும்போது உயிருள்ள வகுப்பறைகள் உருவாக்கப்படும் எனக் கூறினார். ரோட்டரி மகிழ்ச்சிப் பள்ளிகளின் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், வெங்கடாசலபதி, மஸ்தான், நடராஐன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

இதில் நத்துக்குழிப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன் கருத்தாளராகச் செயல்பட்டார்.
இப்பணிப்பட்டறையல் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைக் கணித செயல்பாடுகளுக்கானச் செயலி, வலைதள செயலி, வலையொளி செயலி, ஸ்டெப் கால்குலேட்டர் செயலி, வயதைக் கணக்கிடுதல் செயலி, வரி வடிவத்தைப் பேசுதல் செயலி, சொல் உச்சரிப்புச் செயலி, பார் கோடு ஸ்கேனர் செயலி போன்றவைகளை உருவாக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முடிவில் ராசிபுரம் ரோட்டரி சங்கப் பொருளாளர் ராமசாமி நன்றியுரை  கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!