நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், பிஎல் ஏ 2 வைச் சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உயர் கல்விக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கல்வி உதவித்தொகை என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான K.R.N.ராஜேஸ்குமார் வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் எருமப்பட்டி, ஒன்றியம், எருமப்பட்டி, சீராப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர், இரா.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர் ஆகிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள், பி எல் எ 2 ஆகியோரின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் இல்லம் பேராசிரியர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்துகொண்டு 84 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் கே.பி.இராமசுவாமி, அ.அசோக்குமார், பாலசுப்பிரமணியம், பேரூர் செயலாளர்கள் என்.செல்வராஜு, கு.அன்பழகன், பொன்.நல்லதம்பி, ஆர்.எஸ்.எஸ்.இராஜேஷ், அ.சுப்ரமணியம், முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் விமலா சிவகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்பரர் வ.இளம்பரிதி, இரா.கலைவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.