Thursday, June 19, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்நாமகிரிப்பேட்டை அருகே ரூ.15 கோடி மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் : கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., துவக்கி வைப்பு

நாமகிரிப்பேட்டை அருகே ரூ.15 கோடி மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் : கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., துவக்கி வைப்பு

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அரியாகவுண்டம்பட்டி பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சுத்திகரிப்பி நிலையம், கசடு கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தொடக்க விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

2024-25-ம் ஆண்டின் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிகள் இணைந்து சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளன. இத்திட்டத்தில் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்தம் 8 கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள், சீராப்பள்ளி பேரூராட்சியில் 8 கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் 6 கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் என மொத்தம் 22 கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய மூன்று பேருராட்சிகள் சேர்த்து 21.861 கிலோ மீட்டர் நீளத்திற்கு பைப்லைன் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பேரூராட்சிகளில் வசிக்கும் சுமார் 43,823 மக்கள் பயன்பெறுவர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத்தலைவர் ஆர்.இரவீந்திரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!