மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கிறது. இது குறித்து இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராமத்தில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட நாற்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான துணி / சணல் பொருட்களிலிருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மனி பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்க்கான ஒரு மாத கால இலவச பயிற்சி ராசிபுரம் ஆர்.பட்டணம் கிராமத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்க்கான நேர்முக தேர்வு மே-15 ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது . ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, முத்தக்காளிப்பட்டி, புதுப்பாளையம் மற்றும் அருகாமையிலுள்ள கிராம பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 88258 12528 / 95974 91158 என்ற எண்ணிற்கு குறுந்செய்தி மூலம் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து தேவையான விவரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் எஸ். ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.