முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூரில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி மகன் தரணிதரன், மாவட்ட பாசறை செயலாளர் அக்கரைப்பட்டி எம்.கண்ணன், மாவட்ட பேரவைச் செயலாளர் இ.ஆர்.சந்திரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலர் பி.எஸ்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் எலும்பு, நுரையீரல்,கண், பொது நல மருத்துவம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.