Friday, April 18, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேரில் பார்வை

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேரில் பார்வையிட்டார்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இந்நிலையில் வணிகர் சங்கம் பேரமைப்பின் மாநில மாநாடு குறித்து நாமக்கலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த விக்கிரமராஜா ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு குழுவினருடன் நேரில் சென்று அப்பகுதியை பார்வையிட்டு,
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், பேருந்து நிலையம் பொது மக்களின் பயனிற்கு அமைக்கப்பட வேண்டும்.


தற்போது அமைக்கப்பட உள்ள பேருந்து நிலையம் நகரில் இருந்து மிக தொலைவில் உள்ளதாக தெரிகிறது. இந்த பேருந்து நிலையம் பொது மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். தனி நபர்களுக்கு இது பயனுள்ளதாக தெரிகிறது. பொது மக்களுக்கு இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பது ஏற்புடையதாக இல்லை என்றால் வணிகர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் என தெரிவித்தார். ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு குழுவின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!