தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான 16-வது கராத்தே போட்டிகள் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டிகள் தொடக்க விழாவில்ச தமிழ்நாடு சோட்டகான் கராத்தே அகடாமி தலைவர் டி.கிருஷ்ணன் வரவேற்றார். ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் தலைவர் டாக்டர் சி.நடராஜூ, பள்ளி செயலர் வி.சுந்தரராஜன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

போட்டியில் சேலம், கரூர் ஈரோடு,கோயம்புத்தூர்,சென்னை என தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பள்ளிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இதில் கலந்து கொண்டனர். கராத்தே போட்டியில் 20,30,40,50 என்ற எடை பிரிவின் கீழ் போல் ஜீவன் கட்டா, குரூப் கட்டா, வெப்பன் கட்டா என்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகள் முடிவில் நாமக்கல் மாவட்டத்துக்கு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் முதல் பரிசும், சேலம் மாவட்டம் 2-ம் பரிசும் பெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சோட்டகான் கராத்தே அகாடமி தலைமை பயிற்சியாளர் வி.சரவணன், வெங்கடாசலம், மாணிக்கம், பிரபு, பன்னீர் , ராஜகுமாரி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.