ராசிபுரம் நகரில் காவல்துறை, வாகனப் போக்குவரத்து துறை, ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இப்பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் நகரின் முக்கிய வீதி வழியாக கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கிய பேரணியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இ.எஸ்.முருகேசன், ராசிபுரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் டி.நித்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து இப்பேரணி நாமக்கல் சாலை, கச்சேரி வீதி, பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக அண்ணாசாலை பள்ளி மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் தலைகவசம் அணிவதன் அவசியம், சிறுவர்களை வாகனம் ஒட்ட அனுமதிக்ககூடாது. தாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு மாணவ மாணவியர்கள் பேரணியில் சென்றனர்.
பேரணியில் காவல் உதவி ஆய்வாளர்கள் கீதா, ஈஸ்வரன், ரோட்டரி மாவட்ட சேர்மேன் (இமேஜ்) அம்மன் ஆர்.ரவி, தலைவர் தேர்வு இ.என்.சுரேந்திரன், செயலர் கே.ராமசாமி, பொருளாளர் பி.கே.ராஜா, முன்னாள் தலைவர் எல்.சிவக்குமார், மஸ்தான், ஜி.தினகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.