Tuesday, April 29, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம் ட்டி பகுதியில் இளைஞர் கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவரது மகன் செல்வகுமார் (எ) சக்தி (33. அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் திங்கள்கிழமை மதியம் வீட்டிற்கு சென்றுவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மீண்டும் பட்டறைக்கு நீண்டநேரம் வரவில்லையாம். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் சம்பவம் இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வகுமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதிவைத்துள்ளார். சிலர் கடன், வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் கடன் வட்டி கேட்டு மிரட்டியவர்கள் பெயர், தனக்கு பணம் கொடுக்கவேண்டியவர்கள் பட்டியலையும் அவர் எழுதிவைத்துள்ளார். இது குறித்து ராசிபுரம் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!