ராசிபுரம் அருகே விலைக்கு விற்பனை செய்த நிலத்தை திருப்பிக்கேட்டு தகராறு செய்த வந்த நிலையில், வெளியூரில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தி திட்டமிட்டதாக விவசாயி உட்பட அடியாட்கள் 7 பேரையும் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள நாரைக்கிணறு புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் என்பவர் மகன் முத்துசாமி (45), இவர் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் தங்கராஜ் (60). தங்கராஜ் அனுபவத்தில் இருந்து வந்த நிலத்தை ஐந்து ஆண்டுக்குகளுக்கு முன்னர் முத்துசாமி ரூ.10 லட்சம் கொடுத்து விலைபேசி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தங்கராஜ் கடனாக தான் பணத்தை வாங்கினேன் நிலத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையை தகராறு நீண்டநாட்களாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தங்கராஜ் வெளியூரை சேர்ந்த 7 பேரை கூலிக்கு கூட்டி வந்து விவசாயி முத்துசாமியிடம் தகராறு செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சிலநாட்களாக 7 பேரும் அப்பகுதியில் நோட்டமிட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து ஆயில்பட்டி காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் கொடுத்தார். இதனையடுத்து விசாரணை நடத்தி போலீஸார் 7 பேரும் வெளியூரில் இருந்து வந்துள்ளதை அறிந்தனர். இதனையடுத்து ஈரோடு, சாணார்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் முருகேசன் (32), வளர்ராஜ் மகன் சதீஷ்குமார் (30), ஈரோட்டை சேர்ந்த ஈஸ்வரன் மகன் வாசுதேவன், (35), சண்முகம் மகன் தனசேகரன்,(30), சேலம், எடப்பாடியை சேர்ந்த பழனிமுத்து மகன், முருகன் (40), தர்மபுரி பொம்மிடியை சேர்ந்த மாரி மகன் ரமேஷ் (45), சேலம் காடையாம்பட்டியை சேர்ந்த ராமசுந்தரம் மகன் ராஜமன்னார், (40) ஆகிய 7 பேரையும், விவசாயி தங்கராஜ் (60) என மொத்தம் 8 பேரையும் ஆயில்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.