ராசிபுரம் அருகேயுள்ள தண்ணீர்பந்தல்காடு காட்டூர் ஏ.கே.சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பி.ராமசாமி கவுண்டர். இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வையப்பமலை குப்பாய்காடு பகுதியை சேர்ந்த பொன்னுவேல் என்பவர் மகன் ரவி (43) ஏறியுள்ளார்.

இந்நிலையில் மரத்தில் இருந்து தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் இவரை சூழ்ந்து கொட்டியுள்ளது. ஏராளமான தேனீக்கள் இவரை சூழ்ந்ததால், இறங்கமுடியாமல் மயங்கிய நிலயைில் மரத்தின் உச்சியில் தொங்கிய நிலையில் இருந்தால். இதனையடுத்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த மீட்புத்துறையினர் கயிறு கட்டி மரத்தில் மயங்கிய நிலையில் இருந்த ரவியை மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.