ராசிபுரம் நகர அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் 108-வது பிறந்த தினம் நகரின் பல்வேறு வார்டுகளில் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை தொடர்ந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எம்ஜிஆர் முழுவுருவ சிலைக்கு அதிமுக நகர செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் கட்சியினர் பலரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம்,க டைவீதி, வி. நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் வழக்கறிஞர் கே.பி.சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம், நிர்வாகிகள் வி.டி.தமிழ்செல்வன், ராதாசந்திரசேகரன், வழக்கறிஞர் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.