ராசிபுரம் அருகே உள்ள ஆர். பட்டணம் பகுதியில் கார் பார்க்கவன் கைப்பந்து குழு சார்பில் பொங்கல் விழாவை தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் கைப்பற்றினர்.

தமிழகம் கடந்த 3நாட்களாக தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் நாமக்கல்மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் பார்க்கவன் கைபந்து குழு சார்பில் 44ம் ஆண்டாக பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது . நிகழ்ச்சியில் பெண்களுக்கான ஒட்டபந்தயம், கோலப்போட்டி, வடம் இழுத்தல் அதேபோல ஆண்களுக்கான வடம் இழுத்தல், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் பொன்.நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் பிஎன்ஆர். கண்ணன், இன்ஜினியர் N. மாணிக்கம் மதியழகன் , P.T.ராஜேந்தின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுசென்றனர்.
