சேலம் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு விழாவும், திருவள்ளுவர் தினவிழாவும் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் காசி வினாயகர் ஆலய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி தலைமை வகித்தார். ராசிபுரம் மனவளக் கலை மன்றத் தலைவர் கை.கந்தசாமி வரவேற்றார்.உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் உழவன் ம.தங்கவேல், மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ மாணவர்களுக்கிடையே வேதாத்திரியும், வள்ளுவமும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாக பேசிய மாணவ மாணவர்களுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி் உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசுகள் வழங்கிப் பேசினார். இதில் பேராசிரியர் ஐ.பிரேமலதா, எஸ்.பி.சண்முகம், என்ஜினியர் என்.மாணிக்கம், பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.