ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.இதனை தொடர்ந்து நந்தி பகவான் மற்றும் கைலாசநாதருக்கு ,பால்,தயிர்,தேன், இளநீர்,விபூதி, பன்னீர்,எலுமிச்சை, மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூக்களால் ஆலயத்தின் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி தாயார் உடனமர் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலை சுற்றி திருத்தேரில் பவனி அழைத்துவரப்பட்டார். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருவீதி உலா
இதே போல் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த பழனி பாதயாத்திரை பக்தர்கள் அன்னதானக்குழு சார்பில் ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக வி.நகர் சித்தி வினாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீபாலமுருகன், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீநித்திய சுமங்கலி கோவிலில் இருந்து ஸ்ரீபாலமுருகன் மேளதாளங்களுடன் பக்தர்களால் திருவீதி உலா அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து பாதயாத்திரையாக பழனி செல்லும் வழியில்ஜன.14-ல் ராசிபுரத்தில் அன்னதானமும், தொடர்ந்து அரச்சலூர், தாராபுரம் ஆகிய இடங்களிலும், ஜன.18-ல் பழனியிலும் அன்னதானம் நடைபெறும்.
