நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் ராசிபுரம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் அரசு கேபிள் டிவி தனி வட்டாச்சியர் ராஜா தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு கேபிள்டிவி தலைமை அலுவலக துணைமேலாளர் மணிகண்டன், என்.ஆர்.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பு நடைமுறை குறித்தும், செயல்பாடுகள், செயலாக்கம் குறித்தும், உள்ளூர் கேபிள் டிவி குறித்தும் பேசினர். தனியார் நிறுவனங்களின் செட்டாபாக்ஸ் இணைப்புகள் அதிகரித்து, அரசு கேபிள் டிவி இணைப்புகள் குறைந்து வரும் நிலையில், அரசு செட்டா பாக்ஸ் இணைப்பினை கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ராசிபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேபிள்டிவி ஆபரேட்டர்கள் கேபிள்டிவி தொழில்செய்துவருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் பேசும்போது தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் எச்டி செட்டாபாக்ஸ் அறிமுகபடுத்தியுள்ளது. இதனை கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் பெற்றுகொண்டு அவர்களின் சந்தாதாரர்களுக்கு வழங்கி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பேசினார். இந்நிகழ்ச்சியில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.