விழாவிற்கு சம்மேளன துணைத் தலைவர் சங்கர்லால் தலைமை வகித்தார். ஜெயபால், சுந்தரேசன், குணசேகரன், கோவிந்தராஜன் மற்றும் அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் தாஜ்முகம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், முன்னால் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து 3வது முறை தலைவராக பொறுப்பேற்கும் ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் மற்றும் செயலாளர் ஜெகன் சேட், பொருளாளர் பாஸ்கர், துணை தலைவர்கள் வெங்கடாசலம், நந்தலால், துணை செயலாளர்கள் முருகேசன், செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்கத்தின் செயலாளர் கருணாகரன், பொருளாளர் முரளி மற்றும் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிவில் அறக்கட்டளை செயலாளர் ஜெகன் சேட் நன்றி கூறினார்.