Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் ஜேசிஐ மெட்ரோ நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராசிபுரம் ஜேசிஐ மெட்ரோ நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராசிபுரம் ஜேசிஐ மெட்ரா 8-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா போடிநாயக்கன்பட்டி விக்னேஷ் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் 2025 ஆம் ஆண்டு புதிய தலைவராக மணிமேகலை தமிழரசன், செயலாளராக கவின்மாறன், பொருளாளராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக என். முத்துசாமி, சிறப்பு விருந்தினராக எஸ்.எம்.ஆர்.குமரேசன் மற்றும் 2025 ஆம் ஆண்டு மண்டல தலைவர் மணிகண்டன், மண்டல பொறுப்புத் தலைவர் கர்ணா மித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாசன தலைவர் சசிரேகா சதீஸ்குமார், முன்னாள் தலைவர்கள் பூபதி, முன்னாள் மண்டல தலைவர் நிலாமணி கணேசன், சுகன்யா, உடனடி முன்னாள் தலைவர் சதீஷ்குமார், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைப்பில் புதியதாக 15 பேர் இணைந்து கொண்டனர். நிகழ்வில் பயனாளிக்கு தையல் இயந்திரம், சாலையோர ஆதரவற்றவர்களுக்கு பெட்ஜீட் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் இளம் தொழிலதிபர்கள் பொறியாளர்கள் சிறு குறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!