மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் மின் சிக்கனத்தை குறித்து 300க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி. பேரணியை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்..

பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்…
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சார வார விழா கடைபிடிக்கப்படுகிறது . இதனையடுத்து மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் கொடியாசித்து துவக்கி வைத்த நிலையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேரணியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு அவசியமானது மின்சாரத்தை தேவையில்லாமல் விரயமாக்குவதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் மின் விரயம் ஆவதை தவிர்க்க குண்டு பல்புகளை மாற்றி எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும், குமிழ் விளக்கை பயன்படுத்துவதால் 90 விழுக்காடு மின்சாரம் வீணாகிறது தேவையில்லாத போது விளக்கு, மின்விசிறி, மின் சாதனங்களை நிறுத்திவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.

பேரணியானது ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய வழியாகச் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று இறுதியாக தனியார் பள்ளியை சென்று அடைந்தனர்.
இந்த பேரணியில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இந்த நிகழ்வில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், மின்சார வாரிய உயர் அதிகாரிகள், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.