Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜை

ராசிபுரம் இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் பல இடங்களில் 10 அடி வரையிலான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் கடைவீதி பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு வினாயகருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. சதுர்த்தி விழாவை தொடர்ந்து இரட்டை விநாயகருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை ஆயிர வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டு, பிரசாதமும் வழங்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!