ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி ஶ்ரீ பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்ச்சியாக சனிக்கிழமை நடந்தது.
இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்.22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அதில் கருட வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கெஜலட்சுமி வாகனம், யானை வாகனம்,குதிரை வாகனம் போன்றவற்றில் அலங்கரிக்கப்பட்டு சுவாமி திருவீதி விழா அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ பொன் வரதராஜ பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காலை எழுந்தருளினார். பின்னர் மாலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தேரோட்டம் தொடங்கியது. இத்தேரோட்டம் கவரைத்தெரு, பெரிய கடைவீதி வழியாக இழுத்துச் செல்லப்பட்டு வழக்கப்படி இடை நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று (மே.3) மீண்டும் தேரிழுக்கப்பட்டு நிலை சென்றடையும்.

algolist: 0;
multi-frame: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
motionR: null;
delta:null;
bokeh:0;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 188.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 48;
முன்னதாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் திருவிழாவையொட்டி பூங்கரகம் ஆட்டம், பெண்களின் கோலாட்டம் போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து வாணவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க தேரிழுத்துச் செல்லப்பட்டது. திருத்தேரை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், கோவில் நிர்வாக அலுவலர் சவிதா, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:0.0000,0.0000;
brp_del_sen:0.0000,0.0000;
motionR: null;
delta:null;
bokeh:0;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 9961472;cct_value: 0;AI_Scene: (6, 0);aec_lux: 136.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 44;
கேபிள் ஒயரில் சிக்கிய தேர் கொடி: தேர் புறப்படுவதில் தாமதம்
திருத்தேரோட்டம் புறப்பட்டவுடன் கவரைத்தெரு முனையில் கேபிள் ஒயரில் திருத்தேர் கொடி மோதியது. இதனால் தேர் இழுத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஊழியர் ஒருவர் தேரில் ஏறி கேபிள் ஒயரை சரி செய்தார். இதனையடுத்து திருத்தேர் புறப்பட்டது. இதனையடுத்து சற்று தூரத்தில் மின் ஒயரில் தேரின் கொடி மோதியது. இதனையடுத்து மீண்டும் மின் ஒயரில் சிக்கிய தேர் கொடி சரி செய்யப்பட்டு, தேர் புறப்பட்டு நிலை சேர்ந்தது.





