Saturday, February 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம்: கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டம்

ராசிபுரம்: கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டம்

கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது.

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவர் பயிற்சி மாணவி அரசு மருத்துவமனை வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராசிபுரம் இன்னர் வீல் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் ராயல் ,ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ, ராசிபுரம் அரிமா சங்கம், ராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் போன்ற சேவை அமைப்புகள் இணைந்து இந்த ஆர்பாட்டத்தை நடத்தியது.

இதில் இன்னர் வீல் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் சேர்மேன் தெய்வானை ராமசாமி தலைமை வகித்தார். ராசிபுரம் இன்னர்வீல் சங்கத் தலைவர் சுதாமனோகரன், இந்திய மருத்துவச் சங்கத்தின் ராசிபுரம் கிளைத் தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ், ரோட்டரி சங்கத்தின் மண்டல துணை ஆளுநர் கு.பாரதி, ரோட்டரி சங்கத் தலைவர் (தேர்வு) இ.என்.சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் பயிற்சி மருத்துவரின் கொலையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண் மருத்துவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். உரிய நீதி வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு இதில் பங்கேற்ற பெண்கள் முழக்கமிட்டனர். ரோட்டரி மூத்த நிர்வாகி ராமசாமி, ஜி.தினகரன், இந்திய மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் வி.சுகவனம், ஏ.அய்யப்பன், ஜெ.சித்ரா சுரேந்திரன், ரோட்டரி கிளப் ஆப் ராயல் தலைவர் எம்.பூபாலன், ஜேசிஐ அமைப்பின் தலைவர் ஆர்.சதீஸ்குமார், ஜே. காம்.சேர்மேன் பி.பூபதி, பயிற்சியாளர் என்.தமிழரசன், நிர்வாகிகள் வசந்தி, உமா, காந்திமதி, பூபதி, மணிகண்டன், கிங்ஸ் அரிமா சங்கச் செயலாளர்கள் பி.ரமேஸ்அமல்ராஜ், எஸ்.முத்துசாமி, பொருளாளர் எஸ்.கோபிநாத், ரோட்டரி கிளப் ஆப் எஜூகேசனல் சிட்டி எஸ்.திருமுருகன், இன்னர்வீல் சங்கச் செயலாளர் சிவலீலா ஜோதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!