Thursday, March 27, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 100 இளம் பேச்சாளர்களை தலைமைக்கு தேர்வு செய்து தருமாறு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின்இளைஞர் அணியை அறிவுறுத்தியிருந்தார் அதன்படி “என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி” அறிவிக்கப்பட்டு அதற்கு தமிழ்நாடு முழுவதும் 17,000 அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் .

அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்டக் திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி ஏற்பாட்டில் பேச்சுப்போட்டி நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக வே.மதிமாறன், சிவ.ஜெயகுமார் சௌமியன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, டான் அசோக், மில்டன், சுகுணா திவாகர், மருத்துவர் எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா அருள் எழிலன், மாநில இளைஞரணி துணை செயலாளரும், மேலிட பார்வையாளருமான பி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ங்கேற்று பேச்சுப்போட்டியின் தலைப்புகளாக என்றென்றும் பெரியார், ஏன்?, அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்குப் பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், கலைஞர் – நவீன தமிழ்நாட்டின் சிற்பி,
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதிக் காவலர் கலைஞர், தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற தலைப்புகளில் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் எஸ்.பூபதி, நாமக்கல் நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் வி.கே.பழனிவேல், ஏ.பி.ஆர்.சண்முகம், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.பாலாஜி, துணை அமைப்பாளர்கள் எம்.பாரி, வ.இளம்பரிதி, எம்.கார்த்திக், ரமேஷ், கலைவாணன், பிரபாகரன், டி.சுந்தர், நவலடி ராஜா, ஜெகதீசன், கதிரவன், முரளி, கார்த்தி மற்றும் ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட 157 பேர்களுக்கு மாவட்ட திமுக சார்பில் தலா ரூ.1000 வழங்கப்பட்டது மேலும் இந்த பேச்சு போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மஞ்சு மற்றும் பிரபாகரன் உட்பட கிழக்கு மாவட்ட சார்பில் 18 பேர்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் மாநில அளவில் நடைபெறும் பேச்சு போட்டியில் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!