ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச தாய்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் வாரம் சர்வதேச தாய்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது.

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், இன்னர்வீல் சங்கத்தலைவர் சுதாமனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் டாக்டர் கலைச்செல்வி, சியாமளா ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம், பேறு கால உடல் பராமரிப்பு அட்டவணைகள் பற்றி கர்ப்பணி பெண்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு தாய்பால் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கர்ப்பிணிகளுக்கு, தாய்மார்களுக்கும் வளையல், குங்குமம் போன்ற மங்கள பொருட்கள், பால், முட்டை, பிஸ்கட், கடலை பர்பி உட்பட ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்பட்டன. கர்ப்பிணி பெண்களின் மனநலம் , உணவு, யோகா பயிற்சி போன்றவை பற்றியும் கூறினர். இந்த விழாவில் ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கு.பாரதி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், கே.ராமசாமி, ஆர்.ஆனந்தகுமார், இ.என்.சுரேந்திரன், ஆர்.சிட்டிவரதராஜன், சி.கே.சீனிவாசன், எஸ்.பிரகாஸ், ஜி.தினகரன், பி.கண்ணன், இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் சிவலீலஜோதிகோபிநாத், சுதாரமேஷ், ஸ்ரீதேவி ராஜேஸ், சுதாரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நாமகிரிப்பேட்டை: இதே போல் நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை, வடுகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில், கர்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் 70 கர்ப்பணிகளுக்கு ம், வடுகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 பெண்களுக்கும் ஊட்டச்சத்துப் பொருட்களுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான விழாவில் வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கே.செல்வி, தயாசங்கர்,டாக்டர் விஜயலட்சுமி, இன்னர்வீல் சங்க நிர்வாகி தெய்வானைராமசாமி உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.