மத்திய பட்ஜெட்டை கண்டித்து ராசிபுரம் கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2024-25 ஆம் ஆண்டுக்கு நிதி அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் ராசிபுரம் பழைய பேருந்து நிலைய கனரா வங்கி முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமெழுப்பினர். போராட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, மக்கள் மீதான புதிய வரி விதிப்பு, உணவு மானியம் , உரம் மானியம் வெட்டு,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி குறைப்புச் சலுகை, 100 நாள் வேலைவாய்ப்புக்கு நிதி குறைப்பு போன்றவற்றை முன்னிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்ளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.கந்தசாமி, ஒன்றியச் செயலர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல், நகர செயலர் எஸ்.மணிமாறன்,ஒன்றியச் செயலர் செங்கோட்டுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று கைதாகினர்.
மத்திய பட்ஜெட் கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
RELATED ARTICLES