நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் 25-ம் வருட கார்கில் வெற்றி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்தார். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் , மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாணவர்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. அனைவரும் போருக்கு எதிரான அமைதி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கார்கில் போரின் நிகழ்வுகள், நம் வீரர்களின் வீரசாகசங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
இதே போல் ஆண்டகளூர்கேட் அருள்மிகு வெங்கடேஸ்வரா நடுநிலைப்பள்ளியிலும் கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் ரெ.உமாதேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர்களுக்கு போர் குறித்தும் விளக்கிக்கூறினர். பள்ளி ஆசிரியர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.