தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது,. இக்கூட்டத்தில் சங்கத்தின் வட்டகிளையின் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டக்கிளையின் செயலாளர் ரவி கோரிக்கை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர் தங்கராசு, மற்றும் அரசு ஊழியர்கள், பல்வேறு துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், 8 -ஆவது ஊதிய குழுவை அமைப்பது, காலி பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்புவது, விடுப்பு சரண்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டது
ராசிபுரம் வட்ட அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
RELATED ARTICLES