Friday, February 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் VAO அலுவலக மேல் தளத்தில் துளிர்விட்டு வளரும் அரச மரம் - இப்போதே கவனிப்பது...

ராசிபுரம் VAO அலுவலக மேல் தளத்தில் துளிர்விட்டு வளரும் அரச மரம் – இப்போதே கவனிப்பது நல்லது

ராசிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ளது. இந்த அலுவலகத்தின் தார்சு கட்டிடமான மேல் தளத்தில் அரச மரக்கன்று துளிர்விட்டு வளர்ந்து வருகிறது. மேல் தளத்தில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகியில் சுமார் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ள இந்த மரக்கன்று நாளடைவில் மரமாக வளர்ந்து கொண்டே வருகிறது. சுமார் 3 மாதங்களாக நாள்தோறும் துளிர்விட்டு மரமாக வளர்ந்து கொண்டே வருவதால் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்துக்கு நாளடைவில் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் வளர்ந்து வரும் இந்த மரத்தை இப்போதே வருவாய்த்துறையினர் கவனித்தால் கட்டிடத்துக்கு நல்லது என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் இது பெரிய மரமாக வளர்ந்த பின் மரத்தை வெட்டுவதால் பல அதிகாரிகளிடம் அனுமதியும் பெறவேண்டும் என வருவாய்த்துறையினருக்கு தெரியாதா என்றும் அப்பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!