Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம்

வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம்

ராசிபுரம் அருகேயுள்ள குடியிருந்த வீட்டை வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்தியதால் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

வெண்ணந்தூர் தங்கசாலை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது தனது மனைவி கனகாம்பாள், தாய் பாப்பாத்தி ஆகியோருடன் அப்பகுதியில் அரசு 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய பட்டா நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகிறாராம். இந்நிலையில் இந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது எனக்கூறி வருவாய்த்துறையினர் வீட்டை சில தினங்களுக்கு முன் இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து துரைசாமி தனது தாய் பாப்பாத்தி, மனைவி கனகாம்பாள், மகன் நாகராஜ் ஆகியோருடன் வருவாய் அலுவலகம் வந்து இன்று குடிபுகும் போராட்டம் நடத்தினர். வருவாய் அலுவலகத்தில் தலையனை, பாய் விரித்து படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வருவாய் ஆய்வாளர் சமரசம் பேசினார். ஆனால் குடியிருப்பு வீட்டை இடித்ததற்கு முறையான விளக்கம் அளித்தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி, அலுவலக வாளகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு் பரபரப்பு நிலவியது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!