Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல் எம்பி., மாதேஸ்வரன் ராசிபுரம்பகுதியில் நன்றி அறிவிப்பு

நாமக்கல் எம்பி., மாதேஸ்வரன் ராசிபுரம்பகுதியில் நன்றி அறிவிப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கொ.ம.தே.க.-வை சேர்ந்த வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெற்றதையடுத்து ராசிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு வார்டுகள் தோறும் சென்று நன்றி தெரிவித்தார்.

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் வாக்காளர்களுக்கு திறந்த ஜூப்பில் சென்றவாறு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்களித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ரங்கசாமி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிகளில் பகுதி திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!