நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியின் சிறந்த கூட்டுறவாளரும், நிலவள வங்கியின் நீண்ட நாள் தலைவருமான கே.ஆர்.என்கிற கே.ஆர்.இராமசாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினத்தை (05.07.2024) தொடர்ந்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

ராசிபுரம் விளாங்காட்டு கே.ஆர். என்கிற கே.ஆர்.ராமசாமி, திமுக கட்சியின் முன்னோடி. தந்தை பெரியார், அண்ணா, அன்பழகன் போன்றோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்,. அனைவரிடத்திலும் பண்புடன் பழகும் தன்மையுள்ள, எளிமையான, பொதுவாழ்வில் நேர்மையான அரசியல் வாதி. பல மாணவர்களுக்கு கல்விக்கு இவர் பெரிதும் உதவிபுரிந்துள்ளார். இன்றளவும் பலர் இவரது முயற்சியால் பல துறைகளில் அலுவலர்களாக மட்டுமின்றி, சிறந்த பொறியாளர்களாக, மருத்துவர்களாக விளங்கிவருகின்றனர்.
1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து சிறந்த கூட்டுறவு வங்கித் தலைவர் விருதும், 1999 ஆம் ஆண்டு லைஞர் கருணாநிதி அவர் களிடமிருந்து மாநில சிறந்த கூட்டுறவாளர் விருதும், இராசிபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், தலைமைச் செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினராகவும் 1962 முதல் 2000 வரை இராசிபுரம் கூட்டுறவு நில வள வங்கித் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு நில வள வங்கிப் பெருந்தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராசிபுரம் கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் பேரன்
நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமாக கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் இவரது மகன் வழிப்பேரன். திரு. கே.ஆர். வளர்ப்பில் பரிணாம வளர்ச்சி பெற்று அரசியல் களத்தில் கட்சிப்பணி, பொது வாழ்வில் மக்கள் பணியாற்றி வருகிறார். திராவிட இயக்கத்தினர் நினைவில் வாழும் இராசிபுரம் கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.
கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி., தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.இராமசுவாமி, ராசிபுரம் நகர த்திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து அஞ்சலி செலுத்தினர். வங்கியின் தலைவர் கந்தசாமி, செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்,திமுக நகர நிர்வாகிகள், கொ.ம.தே.க.வினர், வங்கி ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்.