நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் ராசிபுரம் பகுதியில் வயல் வெளி பயிற்சியில் பங்கேற்று வேளாண் சாகுபடி குறித்து பயிற்சி பெற்றனர். இக்கல்லூரி மாணவியர் கல்லூரி வேளாண் படிப்பின் ஒரு பகுதியாக 60 நாட்கள் நடைபெறும் வயல் வெளி பயிற்சி முகாமில் பங்கேற்றுப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனையடுத்து ராசிபுரம் வட்டாரம் கூனவேலம்பட்டி கிராமத்தில் ராசிபுரம் வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் தலைமையில் விதை நேர்த்தி பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதில் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பெவிஸ்டின் என்ற பூஞ்சைக்கொல்லியை பயன்படுத்துவதன் நன்மையையும் அதன் செயல்முறையையும் நேரடியாக விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கமளித்தனர்.
வேளாண் கல்லூரி மாணவியர் வயல் வெளி பயிற்சி
RELATED ARTICLES