Monday, July 6, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசிபுரம் கன்னைய்யா தெரு கற்பக ஸ்ரீவெற்றி வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ராசிபுரம் கன்னைய்யா தெரு கற்பக ஸ்ரீவெற்றி வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ராசிபுரம் கன்னைய்யா தெருவில் உள்ள ஸ்ரீகற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இக்கோவிலின் பொன்விழா ஆண்டைத் தொடர்ந்து கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருவறை, கோபுரங்கள் போன்றவை புனரமைக்கப்பட்டு கோவிலில் விநாயகர் சிலை அமைக்க பீடத்துடன் தும்பிக்கையில் சிவலிங்கம் தாங்கிய ஐந்தரை அடி உயர புதிய வலம்புரி விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது. மேலும் மூலவர் வினாயகரின் இருபுறமும் நாகர் சிலைகள், முன்பகுதியில் எலி வாகனம், பலி பீடம் போன்றவை அமைக்கப்பட்டது.

இதற்கான கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து முன்னதாக சனிக்கிழமை கணபதி கணபதி பூஜை, முதல் கால யாகசாலை ஹோம பூஜை, வாஸ்து பூஜை, கலசம் வைத்தல், பீடத்தில் விநாயகர் சிலை நிலை நிறுத்துதல், மருந்து சாத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இதனைத் தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது.

பின்னர் மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் பங்கேற்ற திரளான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதன் பின்னர் கோமாதா பூஜை, வினாயகர் சுவாமிக்கு பக்தர்களின் தசா தரிசன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர் .பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், நகர திமுக செயலாளர் சங்கர், நகர மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர், தொழிலதிபர் என்.பாலசுப்பிரமணியம், கௌரவ பலிஜுவார் நாயுடுகள் சங்க தலைவர் சிட்டி வரதராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!