நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச போலியோ விழிப்புணர்வு பேரணி ராசிபுரத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்.24-ல் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ராசிபுரம் நகரில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கிய பேரணியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஒ.வி.சதாசிவம் தலைமை வகித்தார்.

ராசிபுரம் உட்கோட்ட காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் மன்னம் சுஜித் சம்பத், ரோட்டரி மாவட்ட ஆளுநர் சி.செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற இப்பேரணியில் போலியோ நோய் குறித்தும், 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட வேண்டியதன் அவசியம், போலியோ ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இப்பேரணி நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் ரோட்டரி மாவட்ட திட்டச்சேர்மேன் எஸ்.சுதாகர், ரோட்டரி சங்க உதவி ஆளுனர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், மாவட்ட ரோட்டரி போலியோ திட்டச் சேர்மன் ஆர்.திருமூர்த்தி, ராசிபுரம் ரோட்டரி சங்க போலியோ திட்டச் சேர்மேன் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மேஜர் ஆர்.சிவக்குமார், ரோட்டரி சங்க செயலர் ஏ.நமச்சிவாயம், பொருளாளர் ஆர்.நடராஜன், முன்னாள் தலைவர்கள் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, என்.பி.ராமசாமி, இ.என்.சுரேந்தரன், எஸ்.பிரகாஷ், சி.கே.சீனிவாசன், எல்.முருகானந்தம், ஆர்.அனந்தகுமார் , பி.கண்ணன், டி.பி.வெங்கடாஜலபதி உள்ளிட்ட இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் ஆர்.தெய்வானை ராமசாமி, மகாலட்சுமி என பலரும் பங்கேற்றனர்.




