ராசிபுரம் நகராட்சி அலுவலக பணியாளர்கள் நால்வர் வேறு நகராட்சிக்கு புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் நகராட்சி உதவியாளர் எஸ்.பழனி, விழுப்புரம் நகராட்சிக்கும், இளநிலை உதவியாளர் ஆர்.பாலசுப்பிரமணி பள்ளப்பட்டி நகராட்சிக்கும், இளநிலை உதவியாளர் கே.மாதேஸ்வரன், குமாரபாளையம் நகராட்சி வருவாய் உதவியாளராகவும், இளநிலை உதவியாளர் டி.ரகுபதி, குமாரபாளையம் நகராட்சி வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது போல், மேட்டூர் நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள கா.கெளதம், ராசிபுரம் நகராட்சியின் இளநிலை உதவியாளராகவும், உதகமண்டலம் நகராட்சி வருவாய் உதவியாளர் எஸ்.உமேஷ்குமார் ராசிபுரம் நகராட்சி இளநிலை உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நகராட்சி நிர்வாக இயக்குனர் ப.மதுசூதன் ரெட்டி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ராசிபுரம் நகராட்சி பணியாளர்கள் நால்வர் பணியிட மாற்றம்
RELATED ARTICLES




