ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் சி.பி. கண்ணையா தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கற்பக வெற்றி விநாயகர் ஆலயத்தில் அமாவாசையை தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்அம்மாவாசை முன்னிட்டு ஸ்ரீ கற்பக வெற்றி விநாயகருக்கு ஒன்பதாம் நாள் மண்டல பூஜை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஷ்குமார், பூங்கொடி குடும்பத்தார்கள் சார்பில் நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் பூஜை நடைபெற்று ஸ்ரீ கற்பக வெற்றி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. பூஜைகளை கைலாசநாதர் ஆலய சிவாச்சாரியார் மது தில்லை நாதசிவம் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது.




